பி.எஸ்.என்.எல் பற்றிய தமிழ் ஆவணப்படம் | An Unending Ringing…

இந்த ஆவணப்படம் 2023, பிப்ரவரி மாதம் கோவையில் வெளியானது…

காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படம், மக்களிடையே தொலைத்தொடர்பை ஏற்படுத்துவதில் பி.எஸ்.என்.எல் பங்களிப்பை வலிமையாக பேசுகிறது. மாபெரும் மக்கள் சொத்தான பி.எஸ்.என்.எல், பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் என்ற அழைப்பாக அமைந்ததே, “BSNL- The Unending Ringing” ஆவணப்படம்.

ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜூ முருகன் பேசிய உரை…

ஆவணப்படம் பற்றிய ஜூனியர் விகடன் செய்தி: அரசால் ஒழித்துக்கட்டப்படுகிறதா பி.எஸ்.என்.எல்? – அதிர்வை ஏற்படுத்தும் ‘முடிவுறாத அழைப்பு’ ஆவணப்படம்!

BSNL போன்ற ஒரு பொதுத்துறை நிறுவனம் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய அவசியம் பற்றிய ஆவணப்படம். கல்வி, தொழில்துறை,விவசாயம், பாதுகாப்பு,என நம் நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் BSNL போன்ற ஒரு பொதுத்துறையின் பங்களிப்பு ஏன் அவசியமாகிறது, தொலைத்தொடர்பு துறையில் BSNL போன்ற ஒரு Giant Player பொதுத்துறையாக அரசின் கையில் இருப்பது எவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு சவாலாகவும் சிம்ம சொற்பனமாகவும் விளங்குகிறது, அது எப்படி நாட்டின் சாமான்ய அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு பல வித பலன்களை அளிக்கிறது என்பதனையும்,விரிவான பார்வையுடன் விளக்கும் ஆவணப்படம்.

வெளியீட்டு நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் செல்லப்பா பேசிய உரை

More From Author

Dawn to Dark (Documentary)

The UNBANKING – காலாவதியாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள்