பாந்த் சிங், யாருக்கும் அடிமையில்லாத ஒரு வாழ்க்கையை வாழ மட்டுமே நினைத்தார். அதற்காக அவர் எதிர்கொண்ட அடக்குமுறைகளும், வன்முறைகளும் நாம் நினைத்துப் பார்த்திட முடியாத அளவிற்கு கொடூரமானவை. அவரது மகள், சாதி ஆதிக்க வெறியர்களால் கூட்டு வல்லுறவுக்கு ஆட்படுத்தபட்டார். சட்டத்தின் வழி போராடி அவர்களை கூண்டில் ஏற்றினார் பாந்த் சிங். அதனால் ஆத்திரமடைந்தவர்கள், பாந்த் சிங்கின் இரு கைகளையும், இரு கால்களையும் வெட்டி எறிந்தனர். ஆனால், அவர்களால் பாந்த் சிங்கின் போராட்ட குணத்தை வெட்டி எறிய முடியவில்லை. பஞ்சாப்பில் ஆதிக்கக்காரர்கள் நிகழ்த்திவரும் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து, தொடர்ந்து தனது பாடல்களால் கேள்விக்கேட்டு வருகிறார். கேட்கும்போதே உடல் சிலிர்க்கும் இந்த வீரனின் கதையைப் பேசுகிறது `துணிவின் பாடகன் பாந்த் சிங்’ எனும் இப்புத்தகம்.
வெளியீடு: காம்ரேட் டாக்கீஸ்
விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்.