“அநீதியைக் கண்டு கோபம் கொள்வாயெனில் நீயும் என் தோழனே” என்றவர் சேகுவேரா. அதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அதனால் தான், எனது வீட்டுச் சுவரில் அவர் படத்தை வரைந்து வைத்திருக்கிறேன்” என்கிறார் ஒரு 20 வயது இளம்பெண். உடல் சிலிர்த்துவிட்டது அந்தக் காட்சியைப் பார்க்கும்போது. மதுரைக்கு அருகில் வன்னிவேளம்பட்டி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த பெண் அவர். கிராமமே கம்யூனிஸ்ட் கிராமம்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள், தங்கள் ஊருக்கு கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை வந்ததில் இருந்து, மார்க்சிய தத்துவத்தை எப்படி உள்வாங்கி, அதுதான் மனிதசமூகத்தை மேம்படுத்தும் என்ற பார்வையைக் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டிருக்கிறார்கள், இளம்தலைமுறைக்கும் அந்தப் பார்வையை எப்படிக் கடத்துகிறார்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக அனைத்து வர்க்கத்தினருக்காகவும் போராட்டக் களங்களில் எப்படி நிற்கிறார்கள் என்பதைப் படத்தில் பார்க்கும்போது, கண்களில் கண்ணீர் திரையிடுகிறது. ஷோஷலிச நாளையைக் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது இந்த ஆவணப்படம்.
watch full video : https://www.youtube.com/watch?v=UNueYZffFp8